Kavithai விக்கி

கவியோகி பேகன்  அவர்களின் கவிதைப் பணி

1)   அந்தாதி இல்லாத அண்ணல் கணேசருக்கு முதன்முதல் அந்தாதி பாடினார். இம்மாபெரும் மெய்யுணர்வுத் துணிவு கண்டு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் தன் சாற்றுக் கவியில்

” அந்தாதி யில்லாத அண்ணல் கணேசற்கோர்

அந்தாதி பாடி யகமகிழ்ந்தான் – சிந்தாத

பாவலர் பேகன் படித்தோர் பதம்பெறுவர்

நாவலந் தீவில் நயந்து”

என்று பாராட்டி மகிழ்ந்தார்.

2) தமித்தாய்க்கு பிள்ளைத்தமிழ் பாடியவர் இவரே. இதற்கும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆசு கவிகள் பல உள.

இது இது காறும்10 பதிவுகளைக் கண்டது. இதுவே “ செவ்வியல் மொழிக் கொரு சீராட்டு என்னும் பெயரில்” வெளியிடப் பெற்றது. இது இவர் தொட்ட இரண்டாவது இமயம். இக்காவியம் ஒன்றே கவியோகி பி.பாண்டியனார்க்கு பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) பெறும் தகுதியை உடைத்து.

3) வங்கக்கவிச்சிங்கம் இரவீந்திர நாத்தாகூரின் அனைத்துக் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இது இவர் தன் 3 வது இமயம்.

4) முதன்முதலில் இருமொழிகளில் மொழியாக்கம் – அதாவது இடபால் மூலம் தமிழில் வலப்பால் அதன் ஆங்கிலக் கவிதை. இவ்வாறு இவர் செய்த சூளாமணியைச் சொல்ல வேண்டும். இது இவர் தொட்ட 4 வது இமயம்.

5)மும்மொழிகளில் (Triglot) தமிழில் முதன்முதலிம் வந்தது. கீதாஞ்சலி – Published by Sura Books. இது இவர் தொட்ட 5 வது இமயம்.வங்கம்/ தமிழ்/ ஆங்கிலம் என்று வரும்.

1)      நாடோறும் அதிகாலை வாசியோக வழிபாட்டில் இயல்பாக செவ்விய நடையில் தினம் மலர் மனமலர் என்று இற்றை நாள் வரை தொடர்ந்து கவியாகம் செய்துவரும் யோகியார் முனைவர் பி. பாண்டியன்.

இஃது இவர் தொட்டுக் கொண்டே வரும் 6 வது இமயம்.

2)   ஆயிரம் ஆயிரமாக

முருகாயிரம்

அறிவாயிரம்

செறிவாயிரம்

அழகாயிரம்

என்று 1000 பாடல்களாகத் தொகுத்து வெளியீட்டு வருவதில் முருகாயிரம் மட்டுமே வந்துள்ளது. நிதி தகுந்த சீர் அறிவு படைத்த உதவியாளர்கள் இன்மையின் மூலப்படிகளாகவே உள்ளன.

இஃது இவர் தொட்டு வணங்கி வரும், வளந்து வரும் 7 வது இமயம்.

3)   நான் பணிபுரியும் Central Institute Classical Tamil Languages நிறுவனத்தின் மூலம் சங்க இலக்கியங்களில் இதுவரை தொட முடியாத இலக்கியங்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவை. சில அதில் முதன்மையானது முத்தொள்ளாயிரம். இதைச் செய்ய யாரும் முன் வரவில்லை. முனைவர் பி. பாண்டியன் எழுதிய முத்தொள்ளாயிரத்தை முதன் முதல் வெளியிடும் பெருமை எங்களுக்குக் கிடைத்தது.

ISBN: 978-81-908000-3-7 அதுவே எம் வெற்றிகர முதல் முயற்சி.

4)    பாரி இருந்திருப்பாராகில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொற்றேங்காய் உருட்டி இருப்பார். இசைத்தட்டுகள் மூலம் இனிய தமிழ் இசைப் பாடல்களை

1)   டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா

2)   டாக்டர் வீரமணி

3)   திருக்குறள் இசையமுதம் – பாடிய பாரதி மற்றும் பிரேமா

4)   தேவிவந்தனம் பாடிய சுசீலா

5)   ஆஞ்சநேயர் மேல் பாடிய ஜானகி

6)   மதுரை அருள்மிகு மீனாட்சி மேல் பாடிய பம்பாய் சகோதரிகள்.

7)   குங்கும நாயகி I,II பாடிய திருமதி வாணி ஜெயராம்

8)   Original Tamil With English Commentary வேதமுதல்வி Sung by சீர்காழி சிவசிதம்பரம், நித்திய ஸ்ரீ, மகாராஜன், உஷாராணி, பிரபாகர்.

இம்முயற்சி உயர்ந்து விளங்கி வரும் எட்டாம் இமயம்.

வெளிநாடுகளில் வெளிவந்த இவர் தம் நூல்கள்

1)      Love in the Wooded Hill Slope

2)      Yoga Demystified

3)      Spark in the Cotton

4)      The Golden Key to The Gnostic Code

Birch and Aspen Publishing Ottawa, ON, Canada.

The Golden Key to The Gnostic Code. This book speaks for itself to prove Dr. Kaviyogi’s mastery in mystiesm and competency in understandable delivery in Classical language. Which could be translated only well learned professors like Dr. K. Loganathan former Secretary General of the world Hindu conference and HOD  of Para Psychology in the University of London. இது இவர் தொட்ட 9 வது இமயம்.

10)இற்றை நாள் வாழ் உயர்தனிக் கவிஞர்களான கவிக்கோ அப்துல் ரஹ்மான், இவர் ஆசிரியர் வித்வான் சேதுரகுநாதன், தமிழண்ணல், பேராசிரியர் ஞானசம்பந்தன், மதுரை இளங்குமரனார் போன்ற தமிழ்க் கவிஞர்கள் என் தலைமையில் பாடியுள்ளனர். எவர் எந்த யாப்பில் படிக்கின்றாரோ அதே யாப்பில் தலைமையின் ஆய்வும் பாராட்டுதலும் இருக்கும். இது ஒரு மாபெரும் விந்தை. இத்தகைய கவியரங்கள் 100 க்கும் மேல் தலைமை தாங்கிப் பாடியுள்ளது. கவியோகி பாண்டியனார் தொட்ட 10 ஆவது இமயம்.